தமிழ்நாடு

tamil nadu

'ஒரே இரவில் 18 செல்போன்கள் ', 'திருவொற்றியூர் முதல் கடற்கரை வரை'- அதிரவைத்த திருடனின் வாக்குமூலம்!

By

Published : Feb 25, 2020, 8:43 AM IST

சென்னை: ஒரே இரவில் 18 செல்போன்களைத் திருடிய நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருடன்
திருடன்

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பார்க் உணவகத்திலிருந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வெளியே வந்துள்ளனர். அப்போது, அவர்களை நோக்கி வேகமாக இருசக்கர வாகனத்தில் பயணித்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதை சற்றும் எதிர்பார்காத அவர்கள் உடனடியாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் திருடனை வேகமாய் பின் தொடர்ந்தனர்.

அப்போது, ஒரு கட்டத்தில் செல்போன் பறித்து தப்பிச் சென்ற வாகனத்தின் மீது, இவர்களது இருசக்கர வாகனம் மோதியதில் செல்போன் திருடர்கள் கீழே விழுந்தனர். இதையடுத்து, விரைந்து அவர்களைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதில் ஒரு திருடனை மட்டுமே பிடிக்க முடிந்தது. மற்றொரு நபர் தப்பிச் சென்றுவிட்டார்.

பின்னர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட திருடனிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி (22) என்பதும், இவர்கள் திருவொற்றியூர் பகுதியிலிருந்து ஆரம்பித்து வடக்கு கடற்கரை, திருவல்லிக்கேணி உட்பட ஒரே இரவில் 18 பேரிடம் தொடர்ச்சியாக செல்போன் பறித்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும், தப்பிச் சென்ற இவரது கூட்டாளியான கார்த்தி என்பவரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். பிடிபட்ட பாலாஜியிடம் இருந்து 18 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:'பணமும தரல' 'நடவடிக்கையும் யாருமே எடுக்கல' ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தற்கொலை முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details