தமிழ்நாடு

tamil nadu

புரட்டாசி மாதம் முடிந்தது...! கொட்டும் மழையில் காசிமேட்டில் குவிந்த மக்கள்!

By

Published : Oct 18, 2020, 12:39 PM IST

சென்னை: புரட்டாசி மாதம் முடிந்த நிலையில், காசிமேடு மீன் மார்க்கெட்டில் அசைவ பிரியர்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி மீன்களை வாங்கிச் சென்றனர்.

kasimedu
kasimedu

சென்னையில் மிகவும் பிரபலமான காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை அமோகமாக விற்பனையாவது வழக்கம். புரட்டாசி மாதம் என்பதால் அங்கு கூட்டம் வழக்கத்தை விட சற்று குறைந்தது. விற்பனை குறைந்தாலும், இறைச்சி வகைகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. புரட்டாசி மாதம் தொடங்கினாலே ஒரு சிலர் அசைவம் சாப்பிடுவதில்லை.

இந்நிலையில், புரட்டாசி முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று (அக்டோபர் 18) காசிமேடு மீன் மார்க்கெட்டில் அதிகாலை 3 மணி முதல் தேன் கூட்டில் தேனீ மொய்ப்பது போல் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது அசைவ பிரியர்கள் நனைந்த படி மீன்களை வாங்கிச் சென்றனர்.

காசிமேடு மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

வழக்கமாக விசை படகுகள் மூலம் 30 டன் முதல் 70 டன் வரை மீன்கள் கடலில் இருந்து பிடித்து வரப்படும். 60 டன் வரையிலான மீன்கள் மட்டுமே கொண்டு வரப்பட்டது. மழையின் காரணமாக மீன் வரத்து குறைவாக இருந்ததால் மீன்களின் விலை ஆயிரம் ரூபாய் முதல் இரண்டாயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. விலை சற்று அதிகமாக இருந்தாலும் மக்கள் வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க: ’அவனது படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும்’ - நீட் தேர்வில் வென்ற மாணவனின் தந்தை கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details