தமிழ்நாடு

tamil nadu

தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டவர் மீது பாய்கிறது குண்டர் சட்டம்

By

Published : Sep 20, 2021, 1:45 PM IST

தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்ட நபரை குண்டர் சட்டத்தில் அடைக்க, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

குண்டர் சட்டத்தில் கைது.
குண்டர் சட்டத்தில் கைது.

சென்னை: செம்மஞ்சேரி சுனாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (23). இவர் துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி, பொது சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்ற பல்வேறு வழக்குகளில் சிறை சென்றுவந்துள்ளார்.

இவர் மீது, 2017ஆம் ஆண்டு கண்ணகி நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சுரேஷ் மீது கண்ணகி நகர் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகப் பதியப்பட்டு கண்காணித்துவந்தார்.

இந்த நிலையில், சுரேஷ் மீண்டும் கண்ணகி நகர், காவல் நிலைய எல்லையில் வழிப்பறி, அடிதடி, கொலை முயற்சி போன்ற வழக்குகளில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்டார். மேலும், சுரேஷ் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருவதால், சென்னை மாநகர காவல் ஆணையர், சுரேஷை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:காய்கறி வாகனத்தில் குட்கா பொருள்கள் கடத்திய நபர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details