தமிழ்நாடு

tamil nadu

'அனைவரும் ஜனநாயகக் கடமையாற்றுங்கள்' - தமிழிசை ட்வீட்

By

Published : Apr 6, 2021, 9:39 AM IST

சென்னை: தகுதியான அனைவரும் கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி ஜனநாயகக் கடமையாற்றுங்கள் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட் செய்துள்ளார்.

Telangana Governor Tamilisai Saundarajan Vote At Saligramam  Telangana Governor Tamilisai Saundarajan  Tamilisai Saundarajan  Tamilisai Saundarajan Tweet  தமிழிசை சவுந்தரராஜன்  தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்  தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்
Tamilisai Saundarajan Vote

தமிழ்நாடு முழுவதும் இன்று (ஏப். 6) காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாக்கினைப் பதிவு செய்துவருகின்றனர். அந்த வகையில், தெலங்கனா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

இது குறித்து தமிழிசை ட்விட்டரில், "சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் எனது வாக்கினைப் பதிவுசெய்தேன். தகுதியான அனைவரும் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி தங்களது வாக்கினைப் பதிவுசெய்து ஜனநாயகக் கடமையாற்றுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழிசை ட்வீட்

இதையும் படிங்க:ஜனநாயகக் கடமையாற்றினார் சூப்பர் ஸ்டார்

ABOUT THE AUTHOR

...view details