பள்ளி மாணவர்கள் 11 பேர் உள்பட 1,591 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து 1,591 நபர்களுக்கு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகரித்துள்ளது.
கரோனா
By
Published : Sep 14, 2021, 9:06 PM IST
|
Updated : Sep 15, 2021, 1:01 PM IST
சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செப்டம்பர் 14ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் புதிதாக 1 லட்சத்து 51 ஆயிரத்து 784 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் 1,591 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 36 லட்சத்து 26 ஆயிரத்து 996 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் 26 லட்சத்து 37 ஆயிரத்து 10 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 549 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்த ஆயிரத்து 537 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 85 ஆயிரத்து 244 என உயர்ந்துள்ளது.
மேலும் தனியார் மருத்துமனையில் 7 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 20 நோயாளிகளும் என 27 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 217 என உயர்ந்துள்ளது. இதில் ஈரோடு, திருவாரூர், நாகப்பட்டினம் மாணவர்கள் 11 பேர் அடங்கும். பள்ளிகள் திறக்கப்பட்டதிலிருந்து மொத்தம் 83 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க இன்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. நாளை இதுகுறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.