தமிழ்நாடு

tamil nadu

முதலியார்குப்பம் படகு சவாரி, மாமல்லபுரம் சுற்றுலாவிற்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு

By

Published : Jan 24, 2020, 5:22 PM IST

சென்னை: வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் முதலியார்குப்பம் படகு சவாரி, மாமல்லபுரம் சுற்றுலாவிற்கு செல்ல தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் புதிய ஏற்பாடு செய்துள்ளது.

மழைத்துளி படகு குழாம்  முதலியார் குப்பம்  முதலியார்குப்பம் படகு சவாரி  மாமல்லபுரம் சுற்றுலா  தமிழ்நாடு சுற்றுலாத்துறை  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்  Tamil Nadu Tourism department introduced the Mahabalipuram trip
tamilnadu tourisam

இது தொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ், 53 தங்கும் விடுதிகளும், 15 சொகுசுப் பேருந்துகளும் உள்ளன. இதன் மூலம் 38 வகையான சுற்றுலாக்களை அரசு நடத்திவருகின்றது. தற்போது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலாவை பிரபலப்படுத்தும் நோக்கில் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் புதியதாக சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், முதலியார்குப்பம் படகு குழாமில் படகு சவாரி செய்து மகிழ்வதோடு உலகப் புகழ்பெற்ற சுற்றுலா மையமான மாமல்லபுரத்தின் சிற்ப எழிலையும் கண்டுகளிக்கலாம். மணல் நிறைந்த கடற்கரை, கண்ணுக்கு விருந்தளித்து ஆர்ப்பரிக்கும் கடலலைகள், என்றும் வற்றாத நீருடைய பக்கிங்காம் கால்வாய், தூய்மையான காற்று, மனதுக்குப் புத்துணர்ச்சியளிக்கும் சுற்றுச்சூழல் போன்ற அம்சங்களைக் கொண்ட சுற்றுலாத் தலம் முதலியார்குப்பம் மழைத்துளி படகு குழாம்.

இந்த படகு குழாமின் முகப்பில் இருந்து வங்கக் கடற்கரை நோக்கி, சுமார் 3 கி.மீ. தூரம் வரை பக்கிங்காம் கால்வாய் செல்கிறது. கால்வாயை ஒட்டி மரங்கள் அடர்ந்த சோலையாகவும், குளிர்ச்சியான சூழலில் நிழல் தரும் பூங்காவாகவும் இப்பகுதி காட்சியளிக்கிறது. மற்ற படகு இல்லங்களைக் காட்டிலும், முதலியார் குப்பம் மழைத்துளி படகு குழாமுக்கு தனிச்சிறப்பு உண்டு. இங்கு படகுகளில் நாம் பயணம் செய்யும்போது நீர்த்துளிகள் பூப்போல நம்மீது பட்டு உடலை சிலிர்க்க வைக்கிறது.

அதனால்தான் இங்குள்ள படகு இல்லம் மழைத்துளி படகு குழாம் என அழைக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செல்லும்போது அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, கவச உடைகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. அவற்றை அணிந்த பின்பே அவர்கள் பாதுகாப்பாக படகுப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இந்த சுற்றுலா ஒவ்வொரு சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணிக்கு சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்திலிருந்து (திருவல்லிக்கேணி, காவல் நிலையம் அருகில்) மாமல்லபுரம் ஹோட்டல் தமிழ்நாடு விடுதியில் காலை உணவு வழங்கப்படுகிறது.

மதிய உண்வு மற்றும் மாலை நேர சிற்றுண்டி முதலியார்குப்பத்தில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் பயன்படுத்தப்படும் குளிர்சாதன வசதியுள்ள சொகுசு பேருந்து இயக்கப்படும்.

காலை உணவுக்கு பிறகு மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா இடங்களையும் பார்த்த பின்னர் பிற்பகல் 1.30 மணிக்கு முதலியார்குப்பம், படகு குழாம் சென்றடையும். இங்கு படகு சவாரி செய்த பின்பு 5 மணி அளவில் முதலியார் குப்பத்தில் இருந்து சென்னை வந்தடையும். இச்சுற்றுலாவிற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 1200 வசூலிக்கப்படுகிறது. இதில் காலை உணவும், மதிய உணவு, சிற்றுண்டி, படகு சவாரி கட்டணம் ஆகியவை உள்ளடங்கும். மேலும், 04425333333, 25333444, 25333857, 25333850-54, என்கின்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு மேலதிக விவரங்களைப் பெறலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 10 ரூபாயில் ஒரு நாள் சுற்றுலா: திருச்சியில் அறிமுகம்

ABOUT THE AUTHOR

...view details