தமிழ்நாடு

tamil nadu

மருவிய பாலினத்தவர், LGBTQIA+ குறித்து விழிப்புணர்வு - தமிழ்நாடு அரசு பதில்

By

Published : Dec 10, 2022, 9:49 AM IST

மருவிய பாலினத்தினர் மற்றும் LGBTQIA PLUS சமூகத்தினர் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:LGBTQIA PLUS (எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ்) சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களில் இப்பிரிவினரை குறிப்பிடுவது தொடர்பான சொல்லகராதியை தயாரிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று (டிச.9) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், மருவிய பாலித்தனவர்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டு கருத்துகள் கோரப்பட்டதாகவும், கருத்துகள் ஏதும் வராததால் விதிகள் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த மாதத்திற்குள் அரசாணை பிறப்பிக்கப்படும் எனக் கூறினார். LGBTQIA PLUS சமூகத்தினருக்கான கொள்கை இன்னும் மூன்று மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் எனவும் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும், LGBTQIA PLUS சமூகத்தினர் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 1 லட்சத்து 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜன.23ஆம் தேதிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: எதிலும் காதல்... ஆதரவு நாடும் தன்பாலின காதலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details