தமிழ்நாடு

tamil nadu

TN Police:ரவுடிகளால் வெட்டப்பட்ட உதவி ஆய்வாளரை நேரில் சென்று நலம் விசாரித்த தாம்பரம் போலீஸ் கமிஷனர்!

By

Published : Aug 1, 2023, 2:07 PM IST

கூடுவாஞ்சேரி பகுதியில் ரவுடிகளால் வெட்டப்பட்டு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ்
police commissioner Amalraj

ரவுடிகளால் வெட்டப்பட்ட உதவி ஆய்வாளரை நேரில் சென்று நலம் விசாரித்த கமிஷனர்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த அருங்கல் பகுதியில் இன்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று போலீஸ் வாகனம் மீது மோதி நின்றுள்ளது. அப்போது காரை சுற்றி வளைத்த போலீசார் உள்ளிருந்த மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்தனர்.

அதையடுத்து காரில் இருந்த 4 மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் காரில் இருந்து இறங்கி போலீசாரை வெட்ட முயற்சித்துள்ளனர். அதில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை இடது கையில் ரவுடிகள் வெட்டிவிட்டு மீண்டும் தலையில் வெட்ட முயற்சித்துள்ளனர்.

அப்போது சுதாரித்த அவர் உடனடியாக குனிந்ததால் தொப்பியில் வெட்டு விழுந்து உள்ளது. அந்த தாக்குதலில் சிவகுருநாதன் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார் என்று கூறப்படுகிறது. பின்னர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் 2 ரவுடிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: Chennai Police Encounter: சென்னை அருகே போலீஸ் என்கவுண்டரில் 2 ரவுடிகள் உயிரிழப்பு!

மற்ற 2 ரவுடிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரவுடிகள் வெட்டியதில் படுகாயம் அடைந்த உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று உதவி ஆய்வாளரிடம் நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் இடம் கேட்டறிந்து சென்றார்.

இதையும் படிங்க: Manipur violence: "மனித உரிமை அமைப்புகள் செயலிழந்து விட்டன" - கொந்தளித்த ஹென்றி டிபேன்!

ABOUT THE AUTHOR

...view details