தமிழ்நாடு

tamil nadu

கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளின் இயக்கம் நிறுத்திவைப்பு

By

Published : Apr 22, 2021, 6:56 PM IST

சென்னை: சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் மெட்ரோ ஏரிகளின் போதுமான நீர் இருப்பை கருத்தில் கொண்டு இரண்டு கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளின் இயக்கத்தை நிறுத்தி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Susகடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளின் இயக்கம் நிறுத்திவைப்பு
கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளின் இயக்கம் நிறுத்திவைப்பு

இது குறித்து வாரியத்தின் அலுவலர்கள் கூறுகையில்," தற்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மட்டுமே நீரை பம்பேற்றம் செய்து சுத்திகரித்து விநியோகம் செய்து வருகிறோம். மற்ற மெட்ரோ எரிகளான பூண்டி, சோழவரம் மற்றும் புழல் எரிகளிலிருந்து தண்ணீர் இணைப்பு கால்வாயின் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் மீஞ்சூர் மற்றும் நெமிலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் இயக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

இரண்டு ஆலைகளிலும் நாள் ஒன்றுக்கு தலா 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுத்து விநியோகம் செய்யப்பட்டு வந்தது. எனினும், மற்ற நீர் நிலைகளில் நீரின் இருப்பை சேமித்து வைத்து கொள்வதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நீர் தேவைப்பட்டால் இரண்டு ஆலைகளும் இயக்கப்பட்டு நீர் எடுக்கப்படும்" என்றனர்.

தற்போது செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல் மற்றும் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை உள்ளிட்ட ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 8,618 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஐந்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 10,859 மில்லியன் கன அடியாக இருந்தது. ஜனவரி 1, 2021 முதல் இன்று வரை 2, 241 மில்லியன் கன அடி நீர் எடுக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் நவம்பர் மாதம் வரை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்பது நீரியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details