தமிழ்நாடு

tamil nadu

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000: ஆகஸ்ட் 15இல் அறிவிக்கிறார் ஸ்டாலின்?

By

Published : Aug 5, 2021, 11:45 AM IST

ஸ்டாலின்

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஆட்சிக்கு வந்தவுடன் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு சுதந்திர தின (விடுதலை நாள்) உரையில் வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற ஸ்டாலின் பரப்புரையின்போது கூறிய வாக்குறுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றிவருகிறார். அந்தவகையில், ஆட்சிப் பொறுப்பேற்ற பின் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 நிவாரணத் தொகையை அறிவித்து அதனைச் செயல்படுத்தினார்.

அதேபோல் மகளிரை மகிழ்விக்க மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயண என்ற வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். மேலும், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 ரூபாய் குறைப்பு உள்ளிட்ட திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார்.

இந்த நிலையில் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கான உரிமைத்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான அறிவிப்பு விடுதலை நாள் உரையில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: உங்கள் இல்லம் நாடி வருகிறது 'மக்களை தேடி மருத்துவம்' - ஸ்டாலின் தொடங்கிவைப்பு

ABOUT THE AUTHOR

...view details