தமிழ்நாடு

tamil nadu

தீபாவளியையொட்டி திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் - தமிழ்நாடு அரசு!

By

Published : Oct 20, 2022, 12:56 PM IST

Updated : Oct 20, 2022, 1:55 PM IST

தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்து அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தீபாவளியையொட்டி திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள்
தீபாவளியையொட்டி திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள்

சென்னை: தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு இதை தவிர்த்து கூறினால் சினிமாதான். மக்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடனும் திபாவளியை கொண்டாட தமிழ்நாடு அரசு பல நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது.

நாளை முதல் 24ம் தேதி திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தீபாவளியையொட்டி திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் - தமிழ்நாடு அரசு!
சிறப்பு காட்சிகள் குறித்து உரிய அரசு அதிகாரிகளிடம் தெரியப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்களுக்கும், திரைப்பட துறையினருக்கும் தீபாவளியை முன்னிட்டு திரைப்பட ரசிகர்களுக்காக தமிழ்நாடு அரசு வழங்கிய ஒரு இனிப்பான செய்தியாக உள்ளது.

இந்நிலையில் திரைப்பட வினியோகிஷ்தர்களின் கோரிக்கைக்கு இனங்க தீபாவளிக்கு மட்டுமின்றி அதற்கு அடுத்த 3 (25, 26 மற்றும் 27) நாட்களுக்கும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கு முன்பு, தீபாவளி வரை மட்டுமே சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது திரைப்பட வினியோகஸ்தர்களின் கோரிக்கைக்காகவும், மக்களின் நலனை கருத்தில் கொண்டும் 21ஆம் முதல் 27ஆம் தேதி வரை அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடிக்கும் சர்தார் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முதல்ல ’டப்பிங்’க்கு வாங்க...! - விஜய் ஆண்டனியை ட்விட்டரில் கலாய்த்த சிஎஸ் அமுதன்

Last Updated : Oct 20, 2022, 1:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details