தமிழ்நாடு

tamil nadu

பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 5:09 PM IST

Southern Railway Pongal special trains: பொங்கல் பண்டிகையை ஒட்டி கோயம்புத்தூர் - தாம்பரம் மற்றும் பெங்களூரு - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே
பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே

சென்னை:பொங்கல் பண்டிகையின் போது பயணிகளிடையே ஏற்படும் கூட்ட நெரிசலைச் சமாளிக்கக் கோயம்புத்தூர் - தாம்பரம் இடையே பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே போல நாளை முதல் பெங்களூரு, திருச்சி இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை - தாம்பரம் சிறப்பு ரயில்:

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கோவையில் இருந்து தாம்பரத்திற்கும், அதே போல் தாம்பரத்தில் இருந்து கோவைக்கும் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதையும் படிங்க: வாணியம்பாடி தோல் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் கேடு; 4 ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை.. பொதுமக்கள் ஆவேசம்!

ஜன.16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரவு 8.45 மணிக்குக் கோவையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் எண்.06086 காலை 5.20 மணிக்குத் தாம்பரத்திற்கு வந்து சேரும். மறுமார்க்கமாக சென்னை தாம்பரத்தில் இருந்து ஜன.17 மற்றும் 18 ம் தேதிகளில் காலை 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் எண்.06085 மாலை 4.30 மணிக்குக் கோவை சென்றடையும்.

பெங்களூரு - திருச்சி சிறப்பு ரயில்:அதே போலப் பெங்களூரு, திருச்சி இடையேயும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரிலிருந்து நாளை (ஜன.12) பகல் 2.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் எண்.06578 முற்பகல் 11.30 மணிக்குத் திருச்சி சென்றடையும்.

மறுமார்க்கமாக ஜன.13 ஆம் தேதி திருச்சியிலிருந்து பெங்களூரு செல்லும் சிறப்பு ரயில் எண்.06578 அதிகாலை 4.45 மணிக்குத் திருச்சியில் இருந்து புறப்பட்டு நண்பகல் 12 மணிக்குப் பெங்களூரு சென்றடையும்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் பெறவில்லையா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு இதோ!

ABOUT THE AUTHOR

...view details