தமிழ்நாடு

tamil nadu

Vignesh Death Case: சிறையில் இருந்த 6 காவலர்களுக்கு ஜாமீன்

By

Published : Aug 8, 2022, 4:12 PM IST

காவல் துறை விசாரணையில் இளைஞர் உயிரிழந்த வழக்கில் கைதான 6 காவல் துறையினருக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat சிறையில் இருந்த 6 காவலர்களுக்கு ஜானீன்
Etv Bharat சிறையில் இருந்த 6 காவலர்களுக்கு ஜானீன்

சென்னைபட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச்சென்ற நிலையில், மறுநாள் சந்தேகத்திற்கு இடமான முறையில் காவல் நிலையத்தில் உயிரிழந்தார்.

இந்தச்சம்பவம் குறித்த சந்தேக மரணம் என்ற வழக்கை, கொலை வழக்காக மாற்றிப்பதிவு செய்த சிபிசிஐடி அலுவலர்கள், தலைமைச்செயலக காலனி சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குமார், முனாப், காவலர் பவுன்ராஜ், ஆயுதப்படை காவலர்கள் ஜெகஜீவன், சந்திரகுமார், ஊர்க்காவல் படையைச்சேர்ந்த தீபக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில் 6 பேரும் ஜாமீன் கேட்டு ஏற்கெனவே இரண்டு முறை மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் 7 மற்றும் ஆகஸ்ட் 2ஆம் தேதிகளில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் 6 பேரும் ஜாமீன்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக மனுதாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்கள் நீதிபதி எஸ். அல்லி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மே 7ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், 90 நாள்களைக் கடந்தும், காவல் துறை விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாததால், தங்களுக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, 6 பேருக்கும் சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:பள்ளிகளின் உடற்கல்வி வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details