தமிழ்நாடு

tamil nadu

”உங்கள் நண்பர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுங்க”... முதல்வர் ஸ்டாலினுக்கு சின்மயி வேண்டுகோள்!!

By

Published : Jun 1, 2023, 7:16 PM IST

கவிஞர் வைரமுத்து மீதான மீடூ புகாரில் நடவடிக்கை எடுக்காதது குறித்து அண்ணாமலை கேள்வி எழுப்பிய நிலையில் பாடகி சின்மயி வைரமுத்து மீது விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Etv Bharat
Etv Bharat

சென்னை: பாஜக எம்பியும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிர்ஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், அவரை கைது செய்ய கோரியும் கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக் ஆகியோரும் வீராங்கனைகளுக்கு ஆதரவாக தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து டெல்லி போலீசார் பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருப்பினும் பூஷன் சரண் சிங் கைது செய்வதற்கான போதிய ஆதாரம் கிடைக்கவில்லை என டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் தாங்கள் வாங்கிய பதக்கங்களை கங்கையில் வீசப் போவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதிய நாடாளுமன்ற திறப்பின் போது தங்களுக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள் வீராங்கனைகள் ஊர்வலமாக சென்றனர்.

அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனையடுத்து மத்திய அரசுக்கு பல்வேறு கண்டன குரல்கள் எழுந்தன. மேலும் மத்திய அரசுக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் மல்யுத்த வீரர்கள் கைது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, ”நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று செல்லக்கூடியது தமிழ் மண்.

எல்லா குற்றத்திற்கும் ஒரு ஆதாரம் உண்டு குற்றத்தை முறைப்படி விசாரிக்க வேண்டும். பாலியல் புகாரில் 4 வீரர்கள், வீராங்கனைகள் கொடுத்த அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் குறித்த கால அவகாசத்துடன் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால் வீராங்கனைகளுக்கு யாரின் மீது நம்பிக்கை வரும் என தெரியவில்லை. இதே நியாயத்தை திமுகவை பார்த்தும் வைரமுத்துவை பார்த்தும் ஊடக நண்பர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் வைரமுத்து மீது 19 மீடூ (Me too) வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பிரபல பாடகி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வைரமுத்துவுக்கு அனைத்து விதத்திலும் திமுக அரசும், முதலமைச்சர் ஸ்டாலினும் ஆதரவாக உள்ளனர். வைரமுத்துவுக்கு ஒரு நியாயம்? டெல்லியில் உள்ள வீராங்கனைகளுக்கு ஒரு நியாயமா” என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாடகி சின்மயி கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக சின்மயி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ”பாலியல் குற்றச்சாட்டுகள் எழும் போது ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். இந்தியா முழுவதும் பாதிக்கப்படும் போது அவர்கள் பக்கம் நிற்கிறீர்கள். அரசியல் கட்சி தலைவர்கள் பேசும் போது மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் பாலியல் சுரண்டல்கள் குறைந்தபாடில்லை.

உங்கள் நண்பர், கவிஞர் வைரமுத்து மீது 17க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகாரளித்தும் அவர் உங்கள் அருகாமையில் மகிழ்ச்சியுடன் தான் இருக்கிறார். இதனால் அவர் குறித்து மேலும் பெண்கள் பேச முடியாத நிலை உள்ளது. உங்கள் கட்சி அவரை தொடர்ந்து முன்னிலை படுத்துகிறது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் திரைத்துறையில் தடையுடன் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடி வருகிறேன்.

நான் தேசிய பெண்கள் கவுன்சிலில் 2018-19 ஆண்டுகளில் புகார் அளித்து விட்டேன். என்னிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன. மதன் கார்க்கியும் அவரது தந்தையின் தவறான நடத்தை குறித்து தெரியும் என சில ஆண்டுகளுக்கு முன்னரே ஒப்புக் கொண்டுள்ளார். பதக்கம் வென்ற வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் பெயரை கூறியுள்ளார்கள்.

அதே போல் 17க்கும் மேற்பட்ட பெண்கள் வைரமுத்து பெயரை குறிப்பிட்டுள்ளனர். இது உங்கள் கண் எதிரே நடக்கிறது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுங்கள். எனது திரைத்துறையில் போக்சோ, ஐசிசி உள்ளிட்ட அமைப்புகள் சரியாக செயல்பட தயவு செய்து ஆவணம் செய்யுங்கள். தொலைக்காட்சியில் குழந்தைகள் தொடரை தொகுத்து வழங்கிய போது ரமேஷ் பிரபா குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவரது பெயரும் வெளியானது. எனவே அனைத்துக்கும் ஆவணம் செய்ய வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மல்யுத்த வீராங்கனைகளுக்கு நியாயம் கிடைக்கும்.. வைரமுத்து விவகாரத்தை பற்றி பேசுவோமா..? - மதுரையில் அண்ணாமலை சீற்றம்!

ABOUT THE AUTHOR

...view details