தமிழ்நாடு

tamil nadu

72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை - பொறியியல் மாணவர் சேர்க்கையில் அதிர்ச்சித் தகவல்

By

Published : Oct 9, 2021, 1:06 PM IST

anna
anna ()

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கையில் இரண்டு சுற்று கலந்தாய்வு நடந்து முடிந்துள்ள நிலையில், 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு இரண்டு வாரங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. சிறப்பு பிரிவு கலந்தாய்வு, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான இரண்டு சுற்று கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து, கல்வியாளர் அஸ்வின் மேற்கொண்ட ஆய்வில், 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. 131 பொறியியல் கல்லூரிகளில் ஒரு விழுக்காட்டிற்கும் கீழ் மாணவர் சேர்க்கை நடந்து இருக்கிறது.

ஐந்து விழுக்காட்டுக்கும் கீழ் 248, கல்லூரிகளிலும், 10 விழுக்காட்டிற்கும் கீழ் 306 கல்லூரிகளிலும், 25 விழுக்காட்டிற்கும் கீழாக 342 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது. 25 விழுக்காட்டிற்கும் அதிகமாக 98 கல்லூரிகளிலும், 90 விழுக்காட்டிற்கும் அதிகமாக 15 கல்லூரிகளிலும் இடங்கள் நிரம்பி உள்ளன.

70 விழுக்காடுக்கு அதிகமாக 33 கல்லூரிகளிலும், 50 விழுக்காடுக்கு கூடுதலாக 61 கல்லூரிகளிலும் இடங்கள் நிரம்பி இருப்பதாகவும் கல்வியாளர் அஸ்வின் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரசின் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் ஒரு லட்சத்து 51 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், இதுவரை வெறும் 31 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 7.5% இடஒதுக்கீடு - அரசு பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்யாத மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details