தமிழ்நாடு

tamil nadu

வாகன சோதனையில் சிக்கிய நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு

By

Published : Aug 21, 2022, 5:52 PM IST

சென்னை சேலையூரில் வாகன சோதனையின் போது நாட்டு துப்பாக்கி, வெடிகுண்டு, கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலையூரில் வாகன சோதனையில் நாட்டு துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு, கத்தி பறிமுதல்... 7 பேர் கைது
சேலையூரில் வாகன சோதனையில் நாட்டு துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு, கத்தி பறிமுதல்... 7 பேர் கைது

சென்னை:தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட சந்தோஷபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, இரு சக்கர வாகனங்களில் வந்த ஏழு பேர் வாகனங்களை திருப்பி கொண்டு தப்பிச்செல்ல முயறனர். இதனால் போலீசார் அவர்களை துரத்திச்சென்று மடக்கிப்பிடித்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, 7 பேரும் பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (32), யுவராஜ் (30), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாரதி (34), மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கீரத்திராஜன் (22), கீழப்பாக்கம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (30), விழுப்புரம் பகுதியை சேர்ந்த மணிகன்டன் (33), பெருங்குடி பகுதியை சேர்ந்த நாகராஜ் (27) என்பது தெரிய வந்தது. அதோடு அவர்களிடம் ஒரு நாட்டு துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு, 2 கிலோ கஞ்சா, கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க:மேட்டூர் அணையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் - போதை ஆசாமி கைது

ABOUT THE AUTHOR

...view details