தமிழ்நாடு

tamil nadu

விஜய்தான் என்னை ஆதரிக்க வேண்டும் - சீமான்

By

Published : Apr 19, 2023, 5:31 PM IST

விஜய் அரசியலுக்கு வந்தால் அவர் தான் தன்னை ஆதரிக்க வேண்டும் என்றும், தான் அவரை ஆதரிக்க மாட்டேன் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

விஜய்தான் என்னை ஆதரிக்க வேண்டும் - சீமான்
விஜய்தான் என்னை ஆதரிக்க வேண்டும் - சீமான்

சீமான் செய்தியாளர் சந்திப்பு

சென்னை:டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஏப்ரல் 19) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவப் படத்திற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “பத்திரிகைத் துறை மட்டும் இல்லாமல், விளையாட்டுத் துறையிலும் சிவந்தி ஆதித்தனாருக்கு ஆர்வம் அதிகம். பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிய பெருமை அவரைச் சாரும். அனைவரையும் நேசித்த பெருமகன், அவர். அவருடைய நினைவைப் போற்றுவதில் பெருமை அடைகிறோம்" என கூறினார்.

இதனையடுத்து பல்வேறு நிகழ்வுகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கலந்து கொள்ளும் நிலையில், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கவே இதை செய்கிறாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய சீமான், ''விஜய் அரசியல் கட்சி தொடங்கவே, இது போன்ற முயற்சிகளை செய்து வருகிறார். அதை நான் வரவேற்கிறேன்.

விஜய் அரசியலுக்கு வந்தால், இந்த மண் வலிமையாக இருக்கும். நான் மட்டுமே எல்லா பக்கத்திலும் இருந்து சண்டை செய்ய முடியாது. அவர் வந்தால் ஆதரவாக இருக்கும். விஜய் அரசியலுக்கு வந்தால், அவர் தான் என்னை ஆதரிக்க வேண்டும். நான் அவரை ஆதரிக்கமாட்டேன். நாம் தமிழர் கட்சியை தனிப்பெரும் இயக்கமாக வளர்க்க வேண்டியதே, என்னுடைய விருப்பம். தமிழ்நாடு, தமிழர்களுக்கு சுடுகாடாக மாறி வருகிறது'' என்றார்.

மேலும், முத்துராமலிங்கத் தேவர் - பெரியார் குறித்த சீமானின் பேச்சு குறித்து, சங்பரிவார்களின் குரலாக சீமான் ஒலிக்கிறார் என்று திருமாவளவன் கூறியதற்குப் பதில் அளித்த சீமான், ''அண்ணனுக்கு (திருமாவளவன்) என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:திமுக-விற்கு தைரியம் இருந்தால் வேங்கை வயலில் புது தொட்டி கட்டாமல் பொதுத்தொட்டி கட்ட முடியுமா - சீமான் ஆவேசம்

ABOUT THE AUTHOR

...view details