தமிழ்நாடு

tamil nadu

மதக் கலவரத்தைத் தூண்ட முயன்ற புகார்: சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

By

Published : May 5, 2022, 1:24 PM IST

மதக்கலவரத்தைத் தூண்ட முயன்றதாக கொடுக்கப்பட்ட புகாரில் ஜெய் பீம் பட தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் மீது வழக்குப் பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதக் கலவரத்தைத் தூண்ட முயன்ற புகார்: சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய - சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு saidapet-court-has-ordered-to-file-case-against-jai-bhim-filmmakers-suriya-jyothika-and-director மதக்கலவரத்தைத் தூண்ட முயன்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரில் ஜெய் பீம் பட தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் மீது வழக்குப் பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதக் கலவரத்தைத் தூண்ட முயன்ற புகார்: சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய - சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு saidapet-court-has-ordered-to-file-case-against-jai-bhim-filmmakers-suriya-jyothika-and-director மதக்கலவரத்தைத் தூண்ட முயன்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரில் ஜெய் பீம் பட தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் மீது வழக்குப் பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை:சூர்யா நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில், வெளியான திரைப்படம் 'ஜெய் பீம்'. இதில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள நடித்துள்ளனர். இருளர் இன மக்களின் வாழ்வில் உள்ள சிக்கல்களையும், நீதியரசர் சந்துருவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும் அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இத்திரைப்படத்தை வெகுவாகப் பாராட்டினர். பாராட்டுகளுக்கு நேரெதிராக, இத்திரைப்படம் குறிப்பிட்ட வன்னியர் சமூகத்தினரை இழிவுபடுத்தும் உள்நோக்கில் உருவாக்கப்பட்டிருப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார். இருப்பினும் ஜெய் பீம் படக்குழுவினருக்கு இந்தியா முழுவதும் இருந்து ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.

ஜெய் பீம் திரைப்படம்

இதனிடையே, ஜெய் பீம் திரைப்படம் மக்களிடையே மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் உள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவனத் தலைவர் சந்தோஷ் நாயகர் என்பவர் வேளச்சேரி காவல் நிலையத்தில் கடந்த 2021 டிசம்பர் 8ல் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காததால், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கச் சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இருளர்கள் இன மக்களின் வாழ்வில் உள்ள சிக்கல்

அந்த வழக்கில் அவர் தெரிவித்துள்ளதாவது, "தேச ஒற்றுமையை சீர்குலைக்கவும், தேசப் பிரிவினையை உண்டு பண்ணவும், மக்களிடையே மத சாதி கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கத்தை காட்சிப்படுத்தப்பட்டுளளது. இந்து வன்னியர் சமூக மக்களின் மனதைப் புண்படுத்தியும், அவர்களை இழிவு படுத்தியும், அவர்களைப் பற்றி பிறமக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கியும், வன்னியர்கள் வழிபடும் அக்கினி குண்டத்தையும், மகாலட்சுமியையும், அவர்கள் வணங்கும் குருவின் பெயரை இழிவுபடுத்துவதாகவும் உள்ளது.

நீதியரசர் சந்துருவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும் அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம்

வெளிநாட்டு மத மாற்ற நிறுவனங்கள் கொடுத்த பணத்தை நன்கொடை என்ற பெயரில் பெற்றும், அகரம் அறக்கட்டளை பணத்தைக் கையாடல் செய்து அந்த பணத்தில் ஜெய்பீம் படத்தை எடுத்து, அதற்கு விளம்பர செலவாகக் காட்டி, 1 கோடி ரூபாயைக் கிறிஸ்துவ மதமாற்ற நிறுவனங்களுக்கு கொடுத்து அந்நிய செலாவணி குற்றம் செய்தும், அகரம் அறக்கட்டளையின் நோக்கங்களுக்கு எதிராகவும் குற்றங்கள் செய்திருப்பது உறுதியாகியுள்ளது.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்

மேலும், தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், கலை இயக்குநர், மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், கவசம் கிளாரட் சபை ரபேல்ராஜ் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

இந்த மனுவை இன்று (மே.5) விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், புகாரின் மீது 5 நாட்களில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டதுடன், முதல் தகவல் அறிக்கையை மே 20 ஆம் தேதி அன்று தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: சூர்யா - ஜோதிகாக்கு 'சமூக ஆஸ்கார்' விருது!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details