தமிழ்நாடு

tamil nadu

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கோவி. மணிசேகரன் மறைந்தார்

By

Published : Nov 18, 2021, 3:33 PM IST

கோவி. மணிசேகரன்

1992ஆம் ஆண்டு வரலாற்றுப் புதினமான குற்றாலக் குறவஞ்சி என்ற படைப்புக்காக தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் கோவி. மணிசேகரன் மறைந்தார்.

சென்னை: பிரபல வரலாற்றுப் புதின எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான கோவி. மணிசேகரன் காலமானார். 1992இல் அவர் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.

கோவி. மணிசேகரன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் உள்ளார். இவர் 8 நாடகங்கள், 29 சிறுகதைத் தொகுப்புகள், 30 சமூகப் புதினங்கள், 50 வரலாற்றுப் புதினங்கள், 8 கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

கோவி. மணிசேகரன்

இவரது வரலாற்றுப் புதினங்கள் இவருக்குப் பெயர் பெற்றுத் தந்தன. 1992ஆம் ஆண்டு இவரது வரலாற்றுப் புதினமான குற்றாலக் குறவஞ்சி தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.

கருணாநிதியுடன் கோவி. மணிசேகரன்

இவர் இரண்டு தமிழ் மற்றும் ஒரு கன்னட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரிடம் 21 ஆண்டு காலம் இவர் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார்.

எம்எஸ்வியுடன் கோவி. மணிசேகரன்

இவர் இயக்கிய தென்னங்கீற்று என்ற தமிழ்த்திரைப்படம், தமிழக ரசிகர்மன்ற விருதும் கர்நாடக அரசின் நீரிக்‌ஷே விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details