தமிழ்நாடு

tamil nadu

அதிமுக ஆட்சியில் மதுரை மத்திய சிறையில் 100 கோடி ரூபாய் ஊழல்? - உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

By

Published : Nov 16, 2021, 3:40 PM IST

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் ()

அதிமுக ஆட்சியின்போது மதுரை மத்திய சிறையில் 100 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக கூறி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குநருமான பி.புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் (Madras High court) பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், "மதுரை மத்திய சிறையில் (Madurai central Prison) சிறைக் கைதிகளால் மருத்துவ பொருட்கள், ஸ்டேஷனரி பொருள்கள் (stationery items), தயாரிக்கப்பட்டு அவை அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாக போலி கணக்கு தயாரித்து ஊழல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம் வரை நடைபெற்ற இந்த ஊழலில் சுமார் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளது" எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அதிகமாக பொருள்கள் உற்பத்தி செய்ததாகவும், அதற்கு சிறை கைதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் போலி கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவே உற்பத்தி செய்து அதிக உற்பத்தி செய்தது போல் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் அப்போதைய சிறைத்துறை கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த ஊழல் தொடர்பாக உள்துறைச்செயலாளர், சிறைத்துறை டிஜிபிக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: காட்பாடியில் பொதுப்பணித் துறையின் புதிய அலுவலகக் கட்டடம்: ஸ்டாலின் திறந்துவைப்பு

ABOUT THE AUTHOR

...view details