சென்னை:தமிழ்நாடு அரசு ரம்மி விளையாட்டை தடை செய்திருக்கும் நிலையில், கல்வித்துறை ரம்மி விளையாடுவது எப்படி? என மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில் பாடத்தில் இடம் பெற்றிருப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதனையடுத்து இந்த பாடப்பகுதி முழுமையாக நீக்கப்பட்டு விட்டதாகவும், அடுத்த கல்வி ஆண்டில் புதிய பாடப்பகுதி இடம்பெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழந்து மன உளைச்சல் காரணமாக பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதன் காரணமாக ரம்மி விளையாட்டை தமிழ்நாடு அரசு தடை செய்திருக்கிறது. இதற்கான சட்டத்தையும் கொண்டு வந்து ஆளுநரின் ஒப்புதலுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்திருக்கிறது. தற்போது வரை ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என்ற சூழலில், பள்ளிக்கல்வித்துறையின் ஆறாம் வகுப்பு கணக்கு புத்தகத்தில் ரம்மி விளையாடுவது எப்படி ?என்ற பகுதி இடம் பெற்று உள்ளது.