தமிழ்நாடு

tamil nadu

அதிமுக போராட்டம் குறித்த கேள்வி… நைஸாக நழுவிய ஓபிஎஸ்!

By

Published : Sep 16, 2022, 4:30 PM IST

மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களே என்ற கேள்விக்கு, செய்தியாளர்களைத் தனியாக சந்தித்து உரிய விளக்கம் அளிக்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறி நழுவிச்சென்றார்

நைசாக நழுவிய ஓபிஎஸ்
அதிமுக போராட்டம் குறித்த கேள்வி… நைஸாக நழுவிய ஓபிஎஸ்!

சென்னை: ராமசாமி படையாட்சியாரின் 105ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்தும், திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவியும் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "அதிமுக சார்பாக ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாள் அன்று உரிய மரியாதையை செலுத்தி இருக்கிறோம். வாழ்நாள் முழுவதும் போராடியவர் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ராமசாமி படையாட்சியாருக்கு புகழுரை தந்தார்" என்றார்.

அப்போது அதிமுக சார்பாக மின் கட்டண உயர்வுக்கு எதிராகப்போராட்டம் நடத்துகிறார்கள்; நீங்கள் அதில் கலந்து கொள்ளவில்லையா அல்லது தனிப்போராட்டம் நடத்தப்போகிறீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, 'செய்தியாளர்களைத் தனியாக சந்தித்து உரிய விளக்கம் அளிக்கப்படும்' எனப் பதிலளித்தும் அடுத்தடுத்த கேள்விகளுக்குப் பதில் அளிக்காமலும் நழுவிச்சென்றார்.

இந்நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வத்துடன், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், கோவை செல்வராஜ், புகழேந்தி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: விமானத்தின் கழிவறையில் சிக்கிய 32 தங்கக்கட்டிகள்; கடத்தல் ஆசாமி யார்? - தேடுதலில் சுங்கத்துறையினர்

ABOUT THE AUTHOR

...view details