தமிழ்நாடு

tamil nadu

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதலாக 2 நீதிபதிகள் நியமனம்

By

Published : Mar 25, 2022, 7:36 AM IST

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதலாக 2 புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

president-ramnath-kovind-appoints-2-judges-for-madras-high-court சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதலாக 2 நீதிபதிகள் நியமனம் - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு
president-ramnath-kovind-appoints-2-judges-for-madras-high-court சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதலாக 2 நீதிபதிகள் நியமனம் - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் எண்ணிக்கையில், உயர் நீதிமன்றத்திற்கு கூடுதலாக 2 புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 59 லிருந்து 61 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, 14 பணியிடங்கள் காலியாக உள்ளது.

இந்தியாவில் உள்ள பழமையான, மிகவும் முக்கியமான உயர் நீதிமன்றங்களில் ஒன்றாக சென்னை உயர் நீதிமன்றம் திகழ்ந்து வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது 75 நீதிபதிகள் வரை பணியாற்ற முடியும் என்கிற சூழல் நிலை இருந்த போதிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது வரை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியை சேர்த்து மொத்தம் 59 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதலாக இரண்டு நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வழக்கறிஞர்கள் கூடுதல் நிதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை உயர்நீதி மன்றத்திற்கு நிடுமொலு மாலா மற்றும் எஸ்.சவுந்தர் ஆகிய இருவரையும் கூடுதல் நீதிபதிகளாக நியமித்துள்ளார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

முன்னதாக, வக்கீல்கள் என்.மாலா, சுந்தர்மோகன், கபாலி குமரேஷ் பாபு, எஸ்.சவுந்தர், அப்துல் கனி அப்துல் அமீது, ஆர்.ஜான் சத்தியன் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட குழு (கொலிஜியம் ) மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் பரிந்துரை செய்தது.

அவர்கள் இருவரும் பணியை ஏற்கும் நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரின் பெயரை உச்ச நீதிமன்றத்தின் கோலிஜியம் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி பரிந்துரை செய்திருந்தது. இந்தச் சூழலில் தற்போது அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், வக்கீல்கள் என்.மாலா, எஸ்.சவுந்தர் ஆகியோரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து, குடியரசு ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் நீதிபதிகளாக விரைவில் பதவி ஏற்க உள்ளனர்.

நீதிபதி என்.மாலாவின், தந்தை மகாகவி ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாசராவ் என்ற ஸ்ரீ ஸ்ரீ, தாயார் சரோஜா ஸ்ரீ ஸ்ரீ. பள்ளிப் படிப்பைச் சென்னையில் உள்ள செயின்ட் ஜான் மற்றும் கேசரி பள்ளிகளிலும், சட்டப்படிப்பைச் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியிலும் படித்தார். 1989-ம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்து சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு, தீர்ப்பாயங்களில் ஏராளமான வழக்குகளில் ஆஜராகித் திறம்பட வாதாடியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதி என் மாலா

கடந்த 2020-ம் ஆண்டு புதுச்சேரி மாநில அரசு பிளீடராக நியமிக்கப்பட்டார். இவர்தான் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் வக்கீல் ஆவார். இதுதவிர புதுச்சேரி பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும் ஆஜராகியுள்ளார்.

நீதிபதி என்.மாலாவின் கணவர் ராதா ரமணா, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசனில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவர்களது மூத்த மகன் ஸ்ரீனிவாஸ் ஜெயபிரசாத் வழக்கறிஞராக க உள்ளார். இளைய மகன் சாய் பிரதீப், ஐஏஎஸ் பதவிக்கான போட்டித் தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி

நீதிபதி எஸ்.சவுந்தர்:நீதிபதி எஸ்.சவுந்தர், மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். 1971-ம் ஆண்டு பிறந்த இவரது பெற்றோர் வழக்குரைஞர் ஆர்.சிவபுண்ணியம்-சிந்தாமணி ஆவர். மயிலாடுதுறையில் பள்ளிப்படிப்பையும், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார். 1993-ம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்த இவர், சத்தீஷ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசல மூர்த்தியிடம் ஜூனீயராக சேர்ந்தார்.

தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி

சொற்பொழிவு :ஏராளமான சிவில், கிரிமீனல் வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார். டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு ஜூடிசியல் அகடாமியில் பல்வேறு சட்டங்கள் குறித்துச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இவரது மனைவி பிருந்தா எம்.டெக். பட்டதாரி. மகன் சச்சின் இன்போசிஸ் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை.. நீர்மட்டத்தை 140 அடியாக குறைக்க கேரளா திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details