தமிழ்நாடு

tamil nadu

பொங்கல் சிறப்பு பேருந்துகளில் இதுவரை 1.94 லட்சம் பேர் பயணம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 10:27 AM IST

Pongal Special Buses: பொங்கல் பண்டிகைக்கு சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு நேற்று மட்டும் 1,260 சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 3,360 பேருந்துகளில் 1,94,880 பேர் பயணித்துள்ளனர்

பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து
பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று (ஜனவரி 12) முதல் நாளை (ஜனவரி 14) வரையில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன், 4 ஆயிரத்து 706 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கு ஒட்டு மொத்தமாக 11 ஆயிரத்து 6 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும் பிற ஊர்களிலிருந்தும் மேற்கண்ட மூன்று நாட்களுக்கு, 8 ஆயிரத்து 478 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 19 ஆயிரத்து 484 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல், பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கு, ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை தினசரி இயக்கக் கூடிய 4,830 சிறப்பு பேருந்துகள் என, ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6 ஆயிரத்து 459 பேருந்துகள் என மொத்தமாக 17,589 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

“மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் ஆறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறியுள்ளார்.

இந்நிலையில் போக்குவரத்துத் துறை சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று (ஜனவரி 12) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் நள்ளிரவு 12.00 மணி நேர நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,100 பேருந்துகளில் 2,100 பேருந்துகளும், 1,260 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 3,360 பேருந்துகளில், 1,94,880 பேர் பயணித்துள்ளனர். மேலும், இதுவரை 1,96,310 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்கின்றனர்.

இதையும் படிங்க:பொங்கல் தினங்களில் ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் சேவை!

ABOUT THE AUTHOR

...view details