தமிழ்நாடு

tamil nadu

பட்டாகத்தியில் கேக் வெட்டி கொண்டாட்டம் - வழக்கறிஞருக்கு போலீசார் வலை

By

Published : May 17, 2019, 8:09 AM IST

சென்னை : வழக்கறிஞர் ஒருவர் தனது பிறந்தநாளின் போது பட்டா கத்தியால் ‘கேக்’ வெட்டி கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டாகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம் - வழக்கறிஞருக்கு போலீசார் வலை

சமீபத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பட்டா கத்தியால் ‘கேக்’ வெட்டி கொண்டாடிய ரவுடி ஒருவரும், அவரது கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்தனர். அதே போல் அயனாவரத்தில் கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்கள் இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் சென்னை அண்ணாநகரில் வழக்கறிஞர் ஒருவர் பொது இடத்தில் பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடி அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாநகர் அருகே பாடிக்குப்பம் ரெயில் நகரை சேர்ந்தவர் விஜயக்குமார், வழக்கறிஞராகவும், தமிழ்நாடு வணிக பேரவையின் மத்திய சென்னை சட்ட ஆலோசகராகவும் உள்ளார். இவர் கடந்த 24ஆம் தேதி தனது பிறந்தநாளை அண்ணாநகரில் உள்ள பிரபல தனியார் உணவு விடுதியான ராக் ரெஸ்டாரண்டில் கொண்டாடி உள்ளார். இளைஞர்கள் புடை சூழ கிரிடம் சந்தன மாலையோடு 3 அடி கொண்ட பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி உள்ளது. போலீசார், இது குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்

பட்டாகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம் - வழக்கறிஞருக்கு போலீசார் வலை
அண்ணாநகரில் பிரபல தனியார் விடுதியில் பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம் - வழக்கறிஞருக்கு போலிசார் வலை.

சென்னையில் பிரபல ரவுடி பினு, தனது பிறந்தநாளின் போது பட்டா கத்தியால் ‘கேக்’ வெட்டி கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பட்டா கத்தியால் ‘கேக்’ வெட்டி கொண்டாடிய ரவுடி ஒருவரும், அவரது கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்தனர். அதே போல அயனாவரத்தில் கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதே போல சென்னை அண்ணாநகரில் வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் அவர்களின் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொது இடத்தில் பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடி அதனை இனைய தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாநகர் அருகே பாடிக்குப்பம் ரெயில் நகரை சேர்ந்தவர் விஜயக்குமார், வழக்றிஞராகவும், தமிழ்நாடு வணிக பேரவையின் மத்திய சென்னை சட்ட ஆலோசகராக உள்ளார். இவர் கடந்த 24 ஆம் தேதி தனது பிறந்தநாளை அண்ணாநகரில் உள்ள பிரபல தனியார் உணவு விடுதியான ராக் ரெஸ்டாரண்டில் கொண்டாடி உள்ளார்.


அப்பொழுது இளைஞர்கள் புடை சூழ கிரிடம் சந்தன மாலையோடு 3 அடி கொண்ட பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவானது அண்ணனுக்கு விசுவல் டிரீட் என்ற பெயரில் இணையத்தளத்தில் தற்பொழுது
வைரலாகி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details