தமிழ்நாடு

tamil nadu

அத்தியாவசிய பணி தவிர்த்து வெளியே வருவதை தவிர்க்கவும் - சென்னை காவல்துறை வேண்டுகோள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 7:27 PM IST

Chennai Rain Update: புயல் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:வங்கக் கடலில் புயல் சின்னமானது அதாவது, குறைந்த காற்றழத்த தாழ்வு பகுதி தற்பொது காற்றழத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து, ஆழ்ந்த காற்று தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், புயல் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை இன்று (டிச.2) வெளியிட்டுள்ள தகவகலில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழையின் பாதிப்பை எதிர்கொள்ள சென்னை மாநகர காவல்துறையின் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளன.

மேலும், 12 பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளன. ஒரு குழுவிற்கு 10 வீரர்கள் என 120 வீரர்கள் அந்தந்த காவல் மாவட்டத்தில் லைஃப் ஜாக்கெட், லைஃப் போட், மரம் அறுக்கும் கருவி, பம்புகள் போன்றவைகளும் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளன. மேலும் 18,000 போலீஸார்கள், 3,000 போக்குவரத்து போலீஸார்களும் போக்குவரத்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இம்முறை முதல் முறையாக மெடிக்கல் ரெஸ்பான்ஸ் குழு ஒன்றை அமைக்கபட்டிருக்கிறது. மாநகராட்சி உள்ளிட்ட பல துறைகளுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளோம். மேலும் குறிப்பாக ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல பிரத்யேகமாக வழித்தடங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும், சென்னையில் எங்கெங்கு தண்ணீர் தேங்கும் மற்றும் மழையை கண்காணிக்க மாநகராட்சி உடன் இணைந்து கண்ண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தும் பணியானது நடைபெற்று வருகிறன என்று காவல்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகின்றன.

பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்வருமாறு:-

  • புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது.
  • கனமழை அல்லது இடியுடன் கூடிய மழையின் போது வெளியே செல்வதை தவிர்க்கவும்.
  • பயணம் செய்ய வேண்டியிருந்தால், பொது போக்குவரத்து அல்லது நம்பகமான வாகனத்தைப் பயன்படுத்தவும்.
  • இடி, புயலின் போது எலெக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
  • மின்கம்பங்கள், கம்பிகள், உலோகப் பொருட்கள் அல்லது மின்னலை ஈர்க்கக்கூடிய கட்டமைப்புகளிலிருந்து விலகி இருக்கவும். விழுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம் எனவும், அதன் அருகில் செல்ல வேண்டாம்' என அறிவுறுத்தப்படுகின்றனர்.

    பொதுமக்கள் சாலையில் செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:-
  • வாகனங்களை மெதுவாகவும் கவனமாகவும் ஓட்டவும். வாகனங்களை ஓட்டும் போது, பிரேக்குகளை சரிபார்க்கவும். தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் வாகனம் ஓட்ட வேண்டாம்.
  • வாகனங்களின் வைப்பர்களைச் சரிபார்க்கவும். வாகனங்களில் செல்லும் போது, குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றவும்.
  • பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும். வெளியில் செல்வதை தவிர்க்கவும்.
  • மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
  • வானிலை அறிவிப்புகள் மற்றும் அதிகாரிகளின் உடனுக்குடன் எச்சரிக்கைகளைப் பின்பற்றவும்.
  • சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டு அச்சப்படாதீர்கள்.
  • புயல் கால அவசர உதவி எண்கள்: அவசர நிலைகளுக்கு தொலைபேசி எண் - 100-ஐ அழைக்கவும்.
  • புயல் காரணமாக அவசர உதவி மற்றும் இடர் ஏற்பட்டால், காவல்துறை அவசர உதவி எண் - 100 (அ) 112-ஐ அழைக்கவும்.
  • சென்னை பெருநகர மாநகராட்சி உதவி எண் 1913-ஐ அழைக்கவும்.
  • தீயணைப்பு மற்றும் மீட்பு குழு அவசர உதவி எண் - 101 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதையும் படிங்க:புயல் செய்த செயல்..! குப்பை மேடாக காட்சியளிக்கும் மெரினா கடற்கரை.. உடனடி நடிவடிக்கை என மாநகராட்சி ஆணையர் ஈடிவி பாரத்திற்கு பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details