தமிழ்நாடு

tamil nadu

கோயில் வாசலில் கிடந்த காளியம்மன் சிலை - போலீஸ் விசாரணை

By

Published : Feb 8, 2022, 3:55 PM IST

கோயில் வாசலில் கிடந்த காளியம்மன் சிலை
கோயில் வாசலில் கிடந்த காளியம்மன் சிலை ()

சென்னை கே.கே. நகரிலுள்ள கோயிலின் வாசலில் சந்தேகத்திறகு இடமான முறையில் கிடந்த காளியம்மன் சிலையை மீட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை: கே.கே. நகர் சிவன் பார்க் அருகே அம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இன்று (பிப் 08) காலை அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் அம்மு, கோயிலின் வெளிப்புறத்தில் பை ஒன்று இருப்பதைக் கண்டுள்ளனர்.

பின்னர், அதனருகே சென்று பார்த்தபோது அதில் காளியம்மன் சிலை ஒன்று இருப்பது தெரியவந்தது. மேலும், அது வெள்ளி சிலை போல இருந்துள்ளது.

உடனடியாக, அம்மு சிலையை கே.கே. நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் காவல் துறையினர் இது குறித்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் அது வெள்ளி இல்லை; ஸ்டெயின்லஸ் ஸ்டீல் எனத் தெரியவந்தது.

மேலும், வேண்டுதலுக்காக யாரேனும் ஸ்டெயின்லஸ் ஸ்டீலால் ஆன உலோகச் சிலையை செய்து கோயிலின் வெளியே வைத்திருக்கலாம் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து, சிலையை வைத்துச் சென்றவர் யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த நபரால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details