தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் : ரயில் சேவையில் மாற்றம்

பல்லவன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்கள்களும் செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் இடையே நாளை (பிப். 16) ஒருநாள் மட்டும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

பல்லவன் வைகை எக்ஸ்பிரஸ்  ரயில் சேவையில் மாற்றம்
பல்லவன் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

By

Published : Feb 15, 2022, 7:24 AM IST

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

எனவே, நாளை (பிப். 16) ஒருநாள் மட்டும், காரைக்குடி முதல் சென்னை எழும்பூர் வரை செல்லும் பல்லவன் அதிவேக விரைவு ரயில் (12606) செங்கல்பட்டு - எழும்பூர் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

அதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை செல்லும் வைகை அதிவேக விரைவு ரயில் (12635) எழும்பூர் - செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்துசெய்யப்பட்டு, செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து மதியம் 02.40 மணிக்குப் புறப்படும்.

பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

பிப்ரவரி 16 அன்று, மதுரை - சென்னை வைகை விரைவு ரயில் (12636) செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் இடையேயும்; சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605) சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு இடையேயும் பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

பல்லவன் அதிவேக விரைவு ரயில் (Pallavan Superfast Express): இதுகாரைக்குடியிலிருந்து சென்னை எழும்பூர் வரை இயங்கும் அதிவேக விரைவு ரயிலாகும். திருச்சிராப்பள்ளி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகியவை இதன் வழித்தடமாகும்.

வைகைஅதிவேக விரைவு ரயில் (Vaigai Superfast Express): இது மதுரை, சென்னை எழும்பூர் இடையே இயங்கும் அதிவேக விரைவு ரயிலாகும். மேலும், இது திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழிச்செல்லும்.

இதையும் படிங்க: 'யாரை மிரட்டுகிறீர்கள் பழனிசாமி? கற்பனையில்கூட அப்படி ஒரு கனவு காணாதீர்கள்!'

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details