தமிழ்நாடு

tamil nadu

தேர்தல் வெற்றியை ஜெயலலிதா ஆத்மாவிற்கு பரிசாக்க வேண்டும் - ஓபிஎஸ்

By

Published : Oct 2, 2021, 2:46 AM IST

ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றார்.

_ops
_ops

சென்னை: செங்கல்பட்டு மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் ஈச்சங்காடு சந்திப்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர் செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சின்னையா, தங்கமணி, நந்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேடையில் பேசிய ஓபிஎஸ், ஒரு மாநிலம் நல்ல நிலையில் இருக்க சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும், மக்கள் பயமின்றி நிம்மதியாக வாழ வேண்டும், அந்த சூழல் இங்கு இல்லை. பெண்கள் தனியாக செல்ல முடியவில்லை, பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழ்பவர்கள் ஸ்டாலினும் திமுகவினரும்.

முதல் கையெழுத்தே நீட் ரத்து என்றனர்; அதற்கு சட்டமசோதாவையும் நிறைவேற்றினார்கள். ஆனால், அந்த சட்டமசோதவை முன்னதாகவே நாங்கள் செய்துவிட்டோம் அதைதான் ஸ்டாலின் புதுப்பித்துள்ளார்.

7.5 % மருத்துவ ஒதுக்கீடு திட்டத்தினால் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு அதிமுக அரசு தான் காரணம்.

இந்த தேர்தல் முழுக்க முழுக்க தொண்டர்களுக்காண தேர்தல். உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக வெற்றி பெற்று அதை ஜெயலலிதா அவர்களின் ஆத்மாவிற்கு பரிசாக அளிக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க:5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவல் விருது: ஸ்டாலின் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details