ETV Bharat / state

5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவல் விருது: ஸ்டாலின் அறிவிப்பு

author img

By

Published : Oct 1, 2021, 10:27 PM IST

கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட ஐந்து காவல் அலுவலர்களுக்கு காந்தியடிகள் காவல் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

  1. ப. தட்சிணாமூர்த்தி, காவல் துணைக் கண்காணிப்பாளர், வடக்கு மண்டலம், மத்திய புலனாய்வுப் பிரிவு, சென்னை.
  2. மா. குமார், காவல் ஆய்வாளர், மத்திய புலனாய்வுப் பிரிவு, வேலூர் மண்டலம்.
  3. பா. சக்தி, காவல் ஆய்வாளர், மதுவிலக்கு அமல் பிரிவு, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்.
  4. ச. சிதம்பரம், காவல் உதவி ஆய்வாளர், முசிறி காவல் நிலையம், திருச்சி மாவட்டம்.
  5. அசோக் பிரபாகரன், தலைமைக் காவலர் 352, சுங்குவார்சத்திரம் காவல் நிலையம், அயல் பணி மத்திய புலனாய்வுப் பிரிவு, காஞ்சிபுரம் மாவட்டம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து பேருக்கு கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, முதலமைச்சரால் 2022 ஜனவரி 26 அன்று, குடியரசு நாளன்று வழங்கப்படும்.

இவ்விருதுடன்,பரிசுத் தொகையாக தலா 40 ஆயிரம் ரூபாய் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கழுத்தை நெரித்துள்ளீர்கள்' - விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.