தமிழ்நாடு

tamil nadu

பாபர் மசூதி இடிப்பு தினம்: போலீசார் ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு!

By

Published : Dec 6, 2022, 7:15 AM IST

Updated : Dec 6, 2022, 9:32 AM IST

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாபர் மசூதி இடிப்பு தினம்:போலீசார் ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு!
பாபர் மசூதி இடிப்பு தினம்: போலீசார் ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு!

சென்னை: டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே எஸ்.பி. அதிவீரப்பாண்டியன் தலைமையிலான ரயில்வே போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பாக ரயில் நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளின் உடைமைகள் முழுவதுமாக சோதனையிட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே எஸ்.பி அதிவீரபாண்டியன், பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் 1350 ரயில்வே போலீசார் மற்றும் 3000 ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாபர் மசூதி இடிப்பு தினம் போலீசார் ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

குறிப்பாக 50க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள், சந்தேகத்திற்குரிய இடங்கள், பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டு வருகிறோம்.

கடந்த 3ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை சுழற்சி முறையில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாகவும், சென்னை மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் 350 ரயில்வே போலீசார் மற்றும் 350 ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கார்த்திகை பிரதோஷம்: தஞ்சை பெரிய கோயிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

Last Updated :Dec 6, 2022, 9:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details