தமிழ்நாடு

tamil nadu

மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் - செவிலியர்கள் கைது

By

Published : Jan 6, 2023, 3:19 PM IST

சென்னை மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட எம்ஆர்பி கோவிட் கால செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்.

செவிலியர்கள் கைது
செவிலியர்கள் கைது

சென்னை:தமிழ்நாட்டில் கரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக செவிலியர்கள் கடந்த 1ஆம் தேதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவர்கள் தங்களை நிரந்தரம் செய்யக் கோரியும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் அலுவலகத்தை 4ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து நேற்று (ஜனவரி 5) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செவிலியர்கள் போராட்டம்

இந்நிலையில், இன்று (ஜனவரி 6) சென்னை மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: என்ஐஏ வெளியிட்ட அதிர்ச்சிகரமான புள்ளி விவரம்!

ABOUT THE AUTHOR

...view details