தமிழ்நாடு

tamil nadu

எங்களையும் கொஞ்சம் திரும்பி பாருங்க.. வட சென்னை மீனவர்களின் குரல்

By

Published : Nov 25, 2021, 6:27 PM IST

வட சென்னை மீனவர்கள்

அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வடசென்னை மீனவர்கள் தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை:எண்ணூர், காட்டுக்குப்பம் மீனவர்கள் மற்றும் சேவ் எண்ணூர் க்ரீக் (Save Ennore Creek) அமைப்பு ஆகியோர் இன்று (நவ.25) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, "தென் மற்றும் மத்திய சென்னை வெள்ளத்தினால் பாதிக்கப்படும்போது அரசு அலுவலர்கள் அந்தப் பகுதிகளை விரைவாக பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கின்றனர். அதே நிலை வட சென்னையில் ஏற்படும்போது புறக்கணிக்கின்றனர்.

கேள்விக் குறியாகும் மக்களின் வாழ்வாதாரம்

எண்ணூரில் 3800 ஏக்கர் நிலங்களை தொழில்மயமாக்கும் தற்போதைய திட்டங்கள் சென்னையை மூழ்கடிக்கும் செயல். எண்ணூர்-பழவேற்காடு மக்களின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க வேண்டும்.

தொழில்மயமாக்கத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட அனுமதிக்க மாட்டோம் என்ற திமுகவின் வாக்குறுதியை நினைவுபடுத்தி, முந்தைய அரசு அறிவித்திருக்கும் பொன்னேரி தொழிற்சாலை நகரப் பகுதி ( Ponneri Industrial Township Area-PITA) திட்டம், அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும்.

அரசுக்கு கோரிக்கை

வல்லூர் அனல் மின்நிலையம், செட்டிநாடு நிலக்கரி கிடங்கு, எண்ணெய் முனையங்கள் ஏற்கனவே 2000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளன. ஆற்றுப்பகுதிகளில் நிலக்கரி சாம்பல் கசிவு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் உடனிருந்தார்.

இதையும் படிங்க: 1000 ஆண்களுக்கு 878 பெண்கள்... தமிழ்நாட்டில் குறைந்த பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்: மருத்துவர் ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details