தமிழ்நாடு

tamil nadu

மலைவாழ் மக்களுக்கான புதிய திட்டம் அறிமுகம்!

By

Published : Nov 26, 2019, 11:22 AM IST

சென்னை: மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக ’வந்தன் விகா கேந்திரம்’ எனும் புதிய திட்டத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்துள்ளார்.

Minister Rajalakshmi

சென்னை, அண்ணா நகரில் மலைவாழ் மக்களுக்கான புதிய திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, ’வந்தன் விகா கேந்திரம்’ எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மலைவாழ் மக்கள் மலைகளில் கிடைக்கும் வளங்களை விற்பனை செய்து பயனடையும் வகையில், 'வந்தன் விகாஸ் கேந்திரம்' திட்டம் துவக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சேலம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

இத்திட்டத்தில் மலைக் கிராம மக்கள் மத்தியில் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் மலைகளில் கிடைக்கூடிய பொருள்களை மேம்படுத்தி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மலைவாழ் மக்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும்’ என்றார்.

இதையும் படிங்க: மலைவாழ் மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்!

Intro:Body:https://we.tl/t-DyJzfLaMxe

*மலைவாழ் கிராம மக்களுக்கு
புதிய வியாபார திட்டம்*

*ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்*

சேலம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக வந்தன் விகா கேந்திரம் எனும் திட்டத்தை துவக்கி உள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்தார்.

சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி இந்த திட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, மலை வாழ் மக்கள் மலைகளில் கிடைக்கும் வளங்களை விற்பனை செய்து பயனடையும் வகையில் வந்தன் விகாஸ் கேந்திரம் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் அமல்படுத்தப்படுகிறது.

மலை கிராமங்களில் உள்ள மக்கள் மத்தியில் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மலைகளில் கிடைக்கும் பொருட்களை மேம்படுத்தி விற்பனை செய்ய இந்த திட்டம் உதவுகிறது. இதற்காக மலை வாழ் மக்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது.

மலைகளில் கிடைக்கும் பொருட்களுக்கு அந்த பகுதி மக்களே விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய இந்த திட்டம் பெரிதும் உதவுகிறது. என அமைச்சர் தெரிவித்தார்.
Conclusion:

ABOUT THE AUTHOR

...view details