தமிழ்நாடு

tamil nadu

"திராவிட மாடல் ஆட்சி கர்நாடகாவில் எதிரொலித்துள்ளது" - அமைச்சர் பொன்முடி!

By

Published : May 13, 2023, 3:14 PM IST

தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சி, தற்போது கர்நாடகாவில் எதிரொலித்துள்ளதாகவும், இது நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலித்து நாடு முழுவதும் திராவிட மாடல் வரும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ponmudi
திராவிட

சென்னை:கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(மே.13) நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி சுமார் 130 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பல்வேறு மாநில அரசியல் கட்சித் தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, "தமிழக முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி, நாடு முழுவதும் வரும். அது தற்போது கர்நாடகாவில் எதிரொலித்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தலிலும் இது எதிரொலிக்கும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை புகுத்த மாட்டோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக, ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். அவர்களது கோரிக்கைகளை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசிலீக்கப்படும். அதனால், ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டு கொண்டுள்ளேன்.

சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் மூன்று பாடப்பிரிவுகளும் தொடர சிண்டிக்கேடிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு தற்போது 90 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், மாணவர்கள் விண்ணப்பிக்க ஜூன் 4ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதால், கூடுதலாக விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறினார்.

இதையும் படிங்க: DK Shivakumar : 8வது முறையாக டி.கே. சிவகுமார் வெற்றி! கண்ணீருடன் நன்றி தெரிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details