ETV Bharat / bharat

DK Shivakumar : 8வது முறையாக டி.கே. சிவகுமார் வெற்றி! கண்ணீருடன் நன்றி தெரிவிப்பு!

author img

By

Published : May 13, 2023, 2:00 PM IST

கர்நாடக தேர்தலில் கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவகுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

DK Sivakumar
DK Sivakumar

ராம்நகரா : 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இன்று (மே. 13) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் கட்சி 132 இடங்களிலும், பாஜக 66 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. தேர்தல்கள் தோறும் ஆட்சியை நிர்ணயிக்கும் கிங் மேக்கர் கூறப்படும் மதச்சார்ப்பற்ற ஜனதா தள கட்சி 21 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. இதில் கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் வெற்றி பெற்றார்.

ஏறத்தாழ 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் டி கே சிவகுமார் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், எம்.எல்.ஏ ஒருவர் பெற்ற அதிகபட்ச வாக்கு வித்தியாசம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கனகபுரா தொகுதியில் 8வது முறையாக வெற்றி பெற்று டி.கே சிவகுமார் சாதனை படைத்து உள்ளார்.

கர்நாடகவில் காங்கிரஸ் கட்சியின் முகமாக கருதப்படும் டி.கே. சிவகுமார், ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்தவர். அந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் கர்நாடக அரசியலை தீர்மானிக்கும் வகையில் பெரும் வாக்கு வங்கியை கொண்டு உள்ளனர். ஒக்கலிகா சமூகத்தின் முகமாக கருதப்படும் சிவகுமாருக்கு, காங்கிரஸ் மேலிடத்தில் நல்ல பெயர் இருப்பதால் முதலமைச்சர் வேட்பாளருக்கான பெயர் பட்டியலில் அவரது பெயரும் நிச்சயம் இடம் பெறும் எனக் கூறப்படுகிறது.

சிறுவயது முதலே அரசியலில் இருக்கும் டி.கே. சிவகுமார், மாணவர் தலைவராக இருந்து முழு அரசியலுக்கு பிரவேசம் ஆனவர். 1989 ஆம் ஆண்டு சாத்தனூர் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எகல்.ஏ.வாக, டி.கே சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991 ஆம் ஆண்டு நிலவிய அரசியல் குளறுபடிகளுக்கு இடையே பங்காரப்பா முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவதற்கு முக்கிய காரணியாக டி.கே சிவகுமார் விளங்கினார்.

தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு மீண்டும் சாத்தனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி கே சிவகுமார், அப்போது முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் அமைச்சரவையில் கூட்டுறவுத் துறையை கவனித்து வந்தார். தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு அதே தொகுதியில் வெற்றி பெற்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக டி.கே. சிவகுமார் பதவி வகித்தார்.

இதையடுத்து தொகுதி மறு பங்கீடு காரணமாக கனகபுரா தொகுதி உருவாக்கப்பட்ட நிலையி அன்று தொடங்கி சிவகுமார்ம், தொடர்ந்து கனகபுராவில் போட்டியிட்டு தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார். 2008, 2013 மற்றும் 2018 தேர்தல்களில் கனகபூரா தொகுதியில் தொடர்ந்து வெற்றிகளை குவித்தார்.

இதில் 2013 ஆம் ஆண்டு சித்தராமையா அமைச்சரவையில் எரிசக்தி துறை அமைச்சராகவும் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் முதலமைச்சர் குமாரசாமி அமைச்சாரவையில் நீர்வளம் மற்றும் கன்னடம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சராக டி.கே சிவகுமார் பொறுப்பு வகித்தார்.

மறுபுறம் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் என அரசியலில் வாழ்க்கையில் பல வெற்றி படிக்கட்டுகளை டி.கே. சிவகுமார் தாண்டி வந்து உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் அவருக்கு நெருங்கிய நட்புறவு இருக்கும் காரணத்தால் இந்த முறை முதலமைச்சராக அவர் தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அதேபோல் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது பெரும் பணக்கார உறுப்பினர் என்ற சிறப்பையும் டி.கே சிவகுமார் கொண்டு உள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், 840 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார். தற்போது 2023 ஆம் ஆண்டு தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது ஆயிரத்து 400 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.

டி.கே சிவகுமாரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை 1962 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி கனகபூர் தாலுகாவில் உள்ள தொட்டலஹள்ளி கிராமத்தில் கெம்பேகவுடா மற்றும் கௌரம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். 1993 ஆம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிவகுமாருக்கு - உஷா தம்பதிக்கு ஐஸ்வர்யா, நஜ்ரா, ஆகாஷ் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இதையும் படிங்க : Jagadish Shettar: அஸ்தமனமாகும் ஜெகதீஷ் ஷெட்டர் அரசியல் வாழ்க்கை.. ஹூப்ளியில் அதிர்ச்சி தோல்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.