தமிழ்நாடு

tamil nadu

விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி வட்டியில்லா கடன் - அமைச்சர் பெரியகருப்பன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 6:02 PM IST

Cooperatives Minister Periyakaruppan: ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவுக்கடன் 2023-2024 நிதியாண்டில் ரூ.1,500 கோடி அளவில் வழங்க உள்ளது என கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Cooperatives Minister Periyakaruppan
கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள், பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகின்றன. வேளாண்கடன் அட்டை (KCC) திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு (ஆடு, மாடு, கோழி) மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவுக் கடனாக ரூ.1,500 கோடி அளவில் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில், 2023-2024ஆம் ஆண்டு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கையின்போது, அமைச்சர் (வேளாண் மற்றும் உழவர் நலத்துறை) அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், அரசாணை (நிலை) எண்.168, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நாள் 18.12.2023-இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2023-2024ஆம் நிதியாண்டிற்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா நடைமுறை மூலதனக் கடன்களுக்கு ஆண்டு குறியீடாக ரூ.1,500 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, கால்நடை வளர்ப்பு (ஆடு, மாடு, கோழி) மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகள், தொடர்புடைய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி, இத்திட்டத்தின் மூலம் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:உதயநிதி ஸ்டாலின் சரியாகத்தான் பேசி வருகிறார் - அமைச்சர் முத்துசாமி

ABOUT THE AUTHOR

...view details