தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட விருதுகள் - முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்துப்பெற்ற அமைச்சர்

By

Published : Oct 6, 2022, 4:14 PM IST

ஜல் ஜீவன் திட்டச்செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட விருது, தூய்மை இந்திய நகர்ப்புற இயக்கத்தின் கீழ் ராமேஸ்வரம் நகராட்சி மற்றும் போத்தனூர் பேரூராட்சிக்கு வழங்கப்பட்ட விருதுகளை அமைச்சர் கே.என்.நேரு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

minister
minister

சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (அக்.6) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்.

அப்போது, ஜல் ஜீவன் (Jal Jeevan Mission) திட்டத்தின்கீழ் 60 விழுக்காடு குடிநீர் குழாய்கள் இணைப்புகளைக் கொண்ட மாநிலங்களில் சிறந்த செயல்பாட்டிற்காக, குடியரசுத்தலைவரால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட விருது, தூய்மை இந்தியா நகர்ப்புற இயக்கத்தின் (Swachh Bharat Mission) 2.0 பதிப்பின்கீழ் 50,000-க்கும் கீழ் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தூய்மையான நகரமாக ராமேஸ்வரம் நகராட்சி தேர்வு செய்யப்பட்டு அதற்காக மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட விருது, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 15,000 முதல் 25,000 மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தூய்மையான நகரமாக கோவை போத்தனூர் பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டு, அதற்காக வழங்கப்பட்ட விருது ஆகிய மூன்று விருதுகளையும் முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

இந்நிகழ்ச்சியின்போது, தலைமைச் செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பேரூராட்சிகள் ஆணையர் ஆர். செல்வராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் பா. பொன்னையா ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் புதிதாக பூங்கா, விளையாட்டுத் திடல் அமைக்க மாநகராட்சித் திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details