சென்னை:கரோனா ஆராய்ச்சி நிதியைப் போலியான ஆவணங்கள் உருவாக்கிப் பயன்படுத்தியதாகச் சித்த மருத்துவ நிறுவன மருத்துவர்கள் மீதான புகாரை 3 மாதத்தில் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மத்திய அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தாம்பரத்திலுள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் குணபாத துறையின் இணைப் பேராசிரியராக பணியாற்றும் சித்த மருத்துவர் எஸ்.விஷ்வேஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவில், "கரோனா தொடர்பான ஆய்வுகளை நடத்த, 2020ஆம் ஆண்டில் ரூபாய் 50 லட்சம் நிதியை மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் ஒதுக்கீடு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிதியைத் தேசிய சித்தா மருத்துவ நிறுவன இயக்குநர் செலவு செய்ய வேண்டிய நிலையில், மருத்துவர்கள் ஆர்.மீனா குமாரி, எம்.மீனாட்சி சுந்தரம், ஜி.ஜெ.கிறிஸ்டியன், பி.சண்முகப்பிரியா, ஏ.மாரியப்பன், வி.சுபா ஆகியோர் இணைந்து, கரோனா குறித்து ஆய்வு செய்ததாகப் போலி ஆவணங்களைத் தயாரித்து, நிதி மோசடி செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.