தமிழ்நாடு

tamil nadu

ரயில் மீது கல்வீசி தாக்கியவர் கைது

By

Published : Nov 4, 2022, 9:54 AM IST

சென்னையில் மது போதையில் ரயில் மீது கல்வீசி தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

ரயில் மீது கல்வீசி தாக்கிய நபர் கைது
ரயில் மீது கல்வீசி தாக்கிய நபர் கைது

கொருக்குப்பேட்டையில் இருந்து வியாசார்பாடி வழியாக செல்லக்கூடிய சரக்கு பெட்டக ரயிலின் இஞ்சின் கடந்த 21 ஆம் தேதி அந்த வழியாக சென்றுள்ளது. அப்போது தண்டவாளத்தின் மீது நின்று கொண்டிருந்த மூவரை கண்டு ஓட்டுநர் ஒலிபெருக்கியை ஒலிக்க செய்துள்ளார். இதில் மது போதையில் இருந்த ஒருவர் அங்கிருந்த கற்களை கொண்டு ஓட்டுநரை தாக்கியுள்ளார்.

அந்த இளைஞரின் நண்பர்கள் தடுத்தும் கூட அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கற்களை கொண்டு நிற்கமுடியாமல் தள்ளாடியபடியே தாக்கியுள்ளார். போதை ஆசாமி செய்யும் இந்த அட்டூழிய செயலை ஓட்டுநர் தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். மதுபோதையில் இருந்த இளைஞர் கற்கள் கொண்டு தாக்கியதில் ரயிலின் முன்பக்க கண்ணாடி உடைந்து ஓட்டுநரின் கையில் வீக்கம் ஏற்படும் அளவிற்கு காயம் ஏற்பட்டது.

ரயில் மீது கல்வீசி தாக்கிய நபர் கைது

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இந்த விவகாரம் குறித்து மத்திய ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆர்கே நகர் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர். வீடியோவை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தியதில் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பூபாலன் என்பவர் மதுபோதையில் கல் வீசி தாக்கியது தெரியவந்தது.

இதனையடுத்து பூபாலனை போலீசார் கைது செய்தனர். ரயில் ஓட்டுநரை தாக்கியது தொடர்பாக பூபாலன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்குப் பிறகு பூபாலன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட பூபாலன் மீது சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Video: புதுக்கோட்டையில் அராஜகம் செய்த ரவுடிகள்

ABOUT THE AUTHOR

...view details