ETV Bharat / state

Video: புதுக்கோட்டையில் அராஜகம் செய்த ரவுடிகள்

author img

By

Published : Nov 3, 2022, 9:51 PM IST

Updated : Nov 3, 2022, 10:18 PM IST

Etv Bharat
Etv Bharat

18:26 November 03

உணவகத்தில் கத்தியைக் காட்டி மிரட்டிய ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டையில் அராஜகம் செய்த ரவுடிகள்

புதுக்கோட்டை அருகே உள்ள கீழபழுவஞ்சியில் பெரியசாமி என்பவர் உணவகம் நடத்தி வந்த நிலையில், நேற்று மாலை கத்தியுடன் புகுந்த இரண்டு ரவுடிகள் பெரியசாமியை மிரட்டி கல்லாப்பெட்டியில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச்சென்றனர்.

இதுகுறித்து பெரியசாமி அளித்தப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச்சென்ற அன்னவாசல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்டவிசாரணையில் ரவுடிகள் பல்லு பாண்டி, தமிழரசன் இருவரும் திருவப்பூர் பகுதியைச்சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்கும் பணியில் இன்று (நவ.3) காவல்துறையினர் ஈடுபட்டனர். பட்டப் பகலில் ரவுடிகள் கத்தியைக்காட்டி பணம் பறித்து செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Last Updated : Nov 3, 2022, 10:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.