தமிழ்நாடு

tamil nadu

மநீம கட்சியின் வளர்ச்சி பணிகளிலும், மக்கள் பணிகளிலும் முழு கவனம் செலுத்த இருக்கிறோம் - துணைத்தலைவர் மௌரியா

By

Published : Feb 21, 2023, 7:02 PM IST

மக்கள் நீதி மய்யம் கட்சி ஆறாவது ஆண்டு தொடக்க விழாவின் போது பேசிய அக்கட்சியின் துணை தலைவர் மௌரியா கட்சியின் வளர்ச்சி பணிகளிலும், மக்கள் பணியிலும் இந்த ஆண்டு முழு கவனம் செலுத்த இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி ஆறாவது ஆண்டு துவக்க விழாவில் கட்சி துணைத்தலைவர் மௌரியா பேசினார்
மக்கள் நீதி மய்யம் கட்சி ஆறாவது ஆண்டு துவக்க விழாவில் கட்சி துணைத்தலைவர் மௌரியா பேசினார்

மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் மௌரியா பேசினார்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக ஆழ்வார்பேட்டையில் அமைந்திருக்கும் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்வு இன்று (பிப். 21) நடைபெற்றது. இந்த நிகழ்வில் அக்கட்சியின் துணைத் தலைவர் மௌரியா, மாநில செயலாளர், மாவட்ட தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கொடி ஏற்றிய பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணைத் தலைவர் மௌரியா, “தாய்மொழி தினத்தன்று தொடங்கப்பட்ட கட்சி மக்கள் நீதி மய்யம் கட்சி, இன்று ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அனைத்து கட்சிகளையும் விட அசுர வளர்ச்சியை 5 ஆண்டுகளில் மக்கள் நீதி மய்யம் அடைந்து எழுச்சியான கட்சியாக தற்போது திகழ்ந்து வருகிறது. இந்தியாவிலே பாசிசத்தை ஒழித்து ஜனநாயகத்தை காக்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கட்சியை வழி நடத்தி வருகிறார்.

இன்று ஜனநாயகத்தை பாதுகாக்கும் கூட்டணியிலே இந்த கட்சி மிகப்பெரிய கட்சியாக நிகழ்ந்து வருகிறது. ஜனநாயகத்தை காக்க இணைப்பு பாலமாகவும் தலைமை ஏற்கும் ஒரு கட்சியாக மக்கள் நீதி மய்யம் ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. ஜனநாயகத்தின் தூண்களை அசைத்து ஜனநாயகத்தை வேர் அறுத்து பாசிசத்தை ஜனநாயகத்தின் வழியாகவே கொண்டு வர செய்து வரும் முயற்சியை எதிர்த்து நிற்கும் முதல் கட்சியாக மக்கள் நீதி மய்யம் இருந்து வருகிறது. அனைத்து இடங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். கட்சி வளர்ச்சி பணிகளிலும் மக்கள் பணியிலும் இந்த ஆண்டு முழு கவனம் செலுத்த இருக்கிறோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரூ.2,000 தான் மொத்த செலவு.. யூடியூப் மூலம் மட்டுமே பிரச்சாரம்.. ஈரோடு கிழக்கில் இப்படி ஒரு வேட்பாளரா?

ABOUT THE AUTHOR

...view details