தமிழ்நாடு

tamil nadu

'பிளஸ் 2 பொதுத் தேர்வு குறித்த முடிவை முதலமைச்சர் அறிவிப்பார்'- மகேஷ் பொய்யாமொழி

By

Published : Jun 5, 2021, 5:20 PM IST

mahesh-poyamozhi-cm-will-announce-12th-exam-decision

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த முடிவை முதலமைச்சர் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் பிளஸ் 2 பொது தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பாஜக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்,
புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் தேர்வுகளை நடத்த வேண்டாம் என வலியுறுத்தின.

திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, தவாக, கொமதேக, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய ஏழு கட்சிகள் தேர்வு நடத்த வலியுறுத்தியுள்ளன. பெரும்பான்மை கட்சிகளின் நிலைப்பாட்டை ஏற்பதாக அதிமுக அறிவித்துள்ளது.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, "கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையாக அளிக்கப்படும். தேர்வு குறித்த முடிவை முதலமைச்சர் அறிவிப்பார்" என்றார். பொதுத்தேர்வு குறித்த முடிவு இன்று அல்லது நாளை தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 12ஆம் பொதுத்தேர்வு நடத்துவது அவசியம் - சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details