தமிழ்நாடு

tamil nadu

காசிக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பை மீட்டெடுக்கவே தமிழ் சங்கமம் - ஆளுநர்

By

Published : Dec 2, 2022, 10:17 PM IST

காசிக்கும் - தமிழ்நாட்டுக்கும் இடையே ஆங்கிலேயர் சிதைத்த உறவை மீண்டும் மீட்டெடுக்கவே தமிழ் சங்கமம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழா
பட்டமளிப்பு விழா

சென்னை:தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தமிழ்நாட்டு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினர்.

விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, விரைவான நீதி வழங்கல் முறையை உறுதிப்படுத்துவதே பண்பட்ட முன்னேறிய சமூகத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றார். நியாயமான மற்றும் விரைவான நீதியே ஆரோக்கியமான மனிதனின் அடித்தளம் என்று ஆர்.என்.ரவி கூறினார்.

நாட்டின் சட்டத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைப்பது அதன் செயல்திறனைப் பொறுத்தது என்றும் தமிழகத்திலிருந்து தோன்றிய சாதுக்கள் மற்றும் முனிவர்கள் பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்திய நாடு தோற்றத்திற்கு கலாசார பெருமை வாய்ந்த தமிழகம் மிகப்பெரிய பங்களிப்பை தந்துள்ளதாகவும், மோடி போன்ற வலிமையான தலைவர் இருப்பதால் இந்தியா மிகப்பெரும் வளர்ச்சியை கண்டுவருவதாகவும் குறிப்பிட்டார். இதனை குலைப்பதற்கு மொழி, இனம், மதம், சாதி என்ற பெயரில் தொந்தரவுகள் வரக்கூடும் என்றும்; அதனை கவனமுடன் எதிர்கொண்டு வளர்ச்சிப்பாதையில் செல்ல வேண்டும் என்றார்.

இதையும் படிங்க:இவிஎம் மீது குற்றம் சாட்டும் காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டது - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details