தமிழ்நாடு

tamil nadu

நீர்நிலை அவசியம், ஆனால் வசிக்கும் மக்களுக்கு இடம் கொடுத்து விட்டு காலி செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

By

Published : May 7, 2022, 7:44 AM IST

நீர்நிலை அவசியம் என்றாலும் அங்கு வசித்த மக்களை மாற்று இடம் கொடுத்து காலி செய்ய வேண்டும் எனவும், நீர் நிலை குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நீர்நிலை அவசியம், ஆனால் வசிக்கும் மக்களுக்கு இடம் கொடுத்து விட்டு காலி செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
நீர்நிலை அவசியம், ஆனால் வசிக்கும் மக்களுக்கு இடம் கொடுத்து விட்டு காலி செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

சென்னை: தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்து மனு அளித்த பின்பு சட்டப் பேரவை வளாகத்தில் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது , ” தமிழ்நாடு முழுவதும் நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பவர்களை காலி செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடவடிக்கை தொடர்வதை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினோம்.

இன்றைய தினம் இந்து சமய அறநிலையத்துறை நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு அச்சுறுத்தல் கூடாது என அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்து கூறியுள்ளோம். வாடகை தொடர்பாக ஒருவாரத்தில் அறிவிப்போம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அரசு உடனடியாக கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். மக்களை நடுத்தெருவில் நிற்க வைப்பது மிக மிக ஆபத்தானது. நீர் நிலை அவசியம் என்று சொன்னால் மாற்று இடம் கொடுத்து காலி செய்ய வேண்டும் எனவும், நீர் நிலை குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். திமுக அரசு ஓராண்டில் பாராட்டக்கூடிய வகையில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு "செல்லூர் ராஜூ" - அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் - சிரிப்பால் அதிர்ந்த பேரவை

ABOUT THE AUTHOR

...view details