தமிழ்நாடு

tamil nadu

வேலை வாங்கி தருவதாக மோசடி: “ஆள வச்சி தூக்கிடுவேன்" - அதிர்ச்சி ஆடியோ

By

Published : May 31, 2022, 2:15 PM IST

வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்த நபரை தொடர்பு கொண்டபோது, “என்னை ஒன்னும் செய்ய முடியாது.. ஆள வச்சி தூக்கிடுவேன்” என போனில் மிரட்டிய ஆடியோ வெளியாகியுள்ளது.

வேலை வாங்கி தருவதாக மோசடி: “ஆள வச்சி தூக்கிடுவேன்" - அதிர்ச்சிகரமான ஆடியோ வெளியானது!
வேலை வாங்கி தருவதாக மோசடி: “ஆள வச்சி தூக்கிடுவேன்" - அதிர்ச்சிகரமான ஆடியோ வெளியானது!

சென்னை:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் முகநூல் கணக்கில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தைக் கண்ட இளைஞர்கள் பலர், சென்னை தி.நகரில் உள்ள சரவணனன் சூர்யா டிராவல்ஸ் அலுவலகத்துக்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்ற பலரிடம், ‘மொத்தமாக 3 லட்சம் ரூபாய் செலவாகும். இதற்கான முன்பணமாக 1 லட்சம் ரூபாயை செலுத்தினால் போதும். மீதமுள்ள தொகையை நீங்கள் பணியில் சேர்ந்த பிறகு சம்பள தொகையில் பிடித்தம் செய்து கொள்வார்கள்’ என சரவணன் கூறியுள்ளார்.

இதனை நம்பி சில இளைஞர்கள் சுமார் 20 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளனர். ஆனால் பல மாதங்களாகியும் வேலை கிடைக்காததால் பணத்தை கொடுத்த பலர் அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது, எந்தவித பதிலும் இல்லை. எனவே, அலுவலகத்தை நேரில் அணுகியுள்ளனர்.

அப்போது மிரட்டப்பட்டதாகவும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சமயத்தில், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளனர்.

வேலை வாங்கி தருவதாக மோசடி: “ஆள வச்சி தூக்கிடுவேன்" - அதிர்ச்சிகரமான ஆடியோ வெளியானது!

மேலும், பணம் செலுத்திய நபர்களின் முகநூல் பக்கத்தில் உள்ள குடும்ப நண்பர்களுக்கு, சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டுகிறார்கள் எனவும் பாதிக்கப்பட நபர்கள் புகாரில் கூறியுள்ளனர். இது குறித்து போனில் தொடர்பு கொண்ட பேசியபோது, “என்னை ஒன்னும் செய்ய முடியாது.. ஆள வச்சி தூக்கிடுவேன்” என்றும் சரவணம் மிரட்டிய ஆடியோவை வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:செக் மோசடி: தோனி மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details