தமிழ்நாடு

tamil nadu

ஓ.பி.எஸ் உள்பட 63 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு

By

Published : Aug 31, 2021, 10:44 PM IST

ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 63 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஓ.பி.எஸ் உள்பட 63 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு
ஓ.பி.எஸ் உள்பட 63 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு

சென்னை:மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்டத்திருத்த மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பிற்பகல் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் சாலை மறியல்

முன்னதாக இந்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 63 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாலாஜா சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு விடுவித்தனர்.

வழக்குப்பதிவு

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 63 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது திருவல்லிக்கேணி காவல் துறையினர் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அரசு உத்தரவை மீறி செயல்படுதல், தொற்று நோய்ப் பரவல் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம் - முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சாலை மறியல்

ABOUT THE AUTHOR

...view details