ETV Bharat / state

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம் - முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சாலை மறியல்

author img

By

Published : Aug 31, 2021, 7:27 PM IST

அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கைது செய்யப்பட்டார்.

ff
ds

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்டத்திருத்த மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பிற்பகல் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்திருந்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.

மசோதா தாக்கல்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இதனை இணைப்பதற்கான 2021ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்தம் மற்றும் ரத்து செய்வதற்கான சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சாலை மறியல்

அந்த சட்டமசோதாவின்படி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. இதன் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒற்றைப் பல்கலைக்கழக வகையிலிருந்து (Unitary) இணைப்புப் பல்கலைக்கழகமாக (Affiliated) மாற்றப்பட்டது.

அதிமுக எம்எல்ஏகள் சாலை மறியல்

இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர்கள் இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

அதேபோல் திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போரூர் நான்கு சாலை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போரூர் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அய்யப்பன்தாங்கலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சிவி சண்முகம் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.