தமிழ்நாடு

tamil nadu

ஆ. ராசாவிற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

By

Published : Mar 28, 2021, 8:34 AM IST

சென்னை: முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசிய ஆ.ராசாவிற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

சென்னை, ராயபுரம் தொகுதிக்குட்பட்ட காசிமேடு பகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாமல் மின் மிகை மாநிலமாக தமிழ்நாடு இருந்தது.

ஆனால் திமுக ஆட்சியில் மின்சார கேபிளில் துணியைக் காய வைத்தார்கள். அந்தளவுக்கு நிர்வாக சீர்கேடு திமுக ஆட்சியில் நடைபெற்றது. மின்சாரத் தடையினால் ஆட்சியை இழந்த ஒரே கட்சி திமுகதான்.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு
ஆ.ராசாவின் பேச்சை தமிழ்நாடு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நிச்சயம் தகுந்த பாடத்தை வரும் தேர்தலில் மக்கள் கொடுப்பார்கள். இது போன்ற பேச்சுக்களை நிறுத்தாவிட்டால் அதிமுக தகுந்த பதிலடி கொடுக்கும். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்

ABOUT THE AUTHOR

...view details