தமிழ்நாடு

tamil nadu

Corona vaccination: 'பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்க’ - அரசு அலுவலர்களுக்கு உத்தரவு

By

Published : Nov 20, 2021, 9:31 AM IST

பொது இடங்களில் கரோனா தடுப்பூசி (Corona vaccination) செலுத்தியது குறித்து அரசு அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும் எனப் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Corona vaccination
Corona vaccination

சென்னை: தமிழ்நாடு அரசு கரோனா தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி வாரந்தோறும் சிறப்பு முகாம் நடத்தி அதிகமான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தற்போது வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாரத்திற்கு இரண்டு நாள்கள் எனத் தடுப்பூசி முகாமை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படும் எனத் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பொது இடங்களில் கூடும் மக்களிடம் கரோனா தடுப்பூசி (Corona vaccination) செலுத்தியது குறித்து அரசு அலுவலர்கள் உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆணையில் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளவை பின்வருமாறு:

  • பள்ளி, கல்லூரி, கடைகள், சந்தைகள், தெருக்களில் தடுப்பூசி செலுத்தல் குறித்து உறுதிசெய்ய வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடை ஊழியர்கள், தடுப்பூசி செலுத்தியதை உறுதிசெய்ய வேண்டும்.
  • அதிக மக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தியது குறித்து உறுதிசெய்ய வேண்டும்.
  • திரையரங்குகள், இதர பொழுதுபோக்கு இடங்கள், விளையாட்டு மைதானங்களில் தடுப்பூசி செலுத்தியவர்கள் குறித்து உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Central Team: வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு தமிழ்நாடு வருகை

ABOUT THE AUTHOR

...view details